கோல்கட்டா: ஊரடங்கு முடியும் நாள் வரையில் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்வதை ஒத்தி வைக்க முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
கொரோன வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ( 20 ம் தேதி) முதல் ஊரடங்கை மாநிலங்கள் தங்கள் பகுதிகளில் தளர்த்திகொள்ளலாம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம், தெலுங்கானா, கர்நாடக மாநிலங்கள் மே 3ம் தேதி வரையில் தொழில்களுக்கு உத்தரவு வழங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது.
இதனிடையே எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறை அமைப்பின் தலைவர் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவருமான கமல் நந்தி கூறியதாவது: உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்து வருகின்றன.
தற்போதைய சூழ்நிலையில் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் சந்தைகள் மூடப்பட்டிருப்பதால் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பல சிறு நிறுவனங்கள் சிவப்பு பகுதியில் அமைந்துள்ளன. மேலும் தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு போக்குவரத்து வசதியில்லை.
இதன்காரணமாக ஊரடங்கு முடியும் வரையில் உற்பத்தியை ஒத்திவைக்க திட்டமிடப் பட்டு உள்ளது என கூறினார்.